2026ஆம் ஆண்டு புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், ஆட்சியை பிடிக்க, ஆட்சியில் பங்குபெற அரசியல் கட்சிகள் கோதாவில் குதித்துள்ளன. புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். பணிக் காகவும், தேர்தல் பணிகளை கவனிக்கவும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜெகத்ரட்சகனை தி.மு.க. தலைமை நியமித்துள்ளது. அவரும் புதுவையை சுற்றிச்சுற்றி வருகிறார். டிசம்பர் 13ஆம் தேதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, "புதுவையில் தி.மு.க. ஆட்சி மலரும்'' என்றார். இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளான பொதுச்செயலாளர் மணவாளன், சிவசண்முகம், ரகுமான், வேல்முருகன், செயலாளர்கள் சரவணன், செல்வநாதன் உள்ளிட்ட 36 நிர்வாகிகள் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி மலரும்' என அமைச்சர் சொல்லியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 2001-ல் தனித்து நின்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. 2021-ல் காங்கிரஸ் தொகுதிகள் தி.மு.க.வுக்கு விட்டுத்தரப்பட்டதால் 6 இடங்களில் வெற்றிபெற்றார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் காங்கிரஸ் லீடிங். 2026-ல் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி வரவேண்டுமென்று ராகுல்காந்தி செயல்படுகிறார். அதேபோல் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி மலரவேண்டும். தி.மு.க. தலைமை, புதுவை தி.மு.க.வினரை அழைத்து, காங்கிரஸுக்கு உறுதுணையாக இருக்க அறிவுறுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.
டெல்லியில், தமிழ்நாடு, புதுவை சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்தியலிங்கம், நாராயணசாமி உள்ளிட்ட புதுவை காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டு பேசும்போது, புதுவையில் தி.மு.க. ஆட்சி அமையுமென்று பேசியதை கூறியுள்ளனர். அதோடு, இம்முறை நாம் 20 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளுக்கு 10 தொகுதிகளும் மட்டுமே தர வேண்டுமென்றும் வலியுறுத்தினர். புதுவையில் கூட்டணி ஆட்சிக்கும் ஒப்புக்கொள்ளக்கூடாது. அப்படி கேட்டால், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை கேட்போ மென்று சொல்லியுள்ளனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி தி.மு.க. வலிமையான கட்சியென்றால், புதுவையில் காங்கிரஸ் தான் வலிமையான கட்சி. பலமுறை ஆட்சியிலிருந்துள்ளது. காங்கிரஸ்தான் புதுவையில் முதல்வர் பொறுப்பில் அமரவேண்டும். நம் பலமில்லாமல் தி.மு.க.வால் வெற்றிபெற இயலாது'' என கூறியிருக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/pondy1-2025-12-18-17-33-34.jpg)
இதுகுறித்து புதுவை தி.மு.க. நிர்வாகிகளோ, "ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெறவேண்டும், ஆட்சியை பிடிக்கவேண்டுமென்று திட்டங்களைத் தீட்டுவது இயல்பு. ஆளும்கட்சியை எதிர்த்து நாங்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். காங்கிரஸோ தேர்தல் நேரத்தில் மட்டுமே அதை செய்கிறது. தி.மு.க.வும் இங்கே ஆட்சி செய்துள் ளது. பாரூக் மரைக்காயர், ராமச்சந்திரன், ஜானகி ராமன் போன்றவர்கள் முதலமைச்சராக இருந்துள் ளார்கள். தற்போது முன்பைவிட பலமாக இருக் கிறோம், அதனால் 20 இடங்களை கேட்கிறோம். அடுத்து திடாவிட மாடல் ஆட்சியெனச் சொல் வதில் என்ன தவறு?'' என கேள்வியெழுப்புகின்றனர்.
புதுவை அரசியல் விமர்சகர்களோ, "2016 தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது. அதே கூட்டணியில் தி.மு.க. 9 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. நாராயணசாமி முதலமைச்சராக இருந்தார். தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிப்படி காங்கிரஸ் நடக்கவில்லையென்று தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டி னர். இதனால் எலியும் பூனையுமாக இருந்தவர் களை சமாதானப் பேச்சுவார்த்தையால் ஒருங் கிணைத்து, 2021 தேர்தலில் கூட்டணி தொடர்ந்தது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க. 13 தொகுதிகளிலும், சி.பி.ஐ., வி.சி.க. தலா ஒரு தொகுதியிலுமாகப் போட்டியிட்டன. தேர்தல் முடிவிலோ, காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், தி.மு.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனால் தி.மு.க. எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/pondy2-2025-12-18-17-33-51.jpg)
இந்த ஆட்சி முழுவதும், என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. கூட்டணிக்கெதிராக இண்டியா கூட் டணிக் கட்சிகள் தனித்தனியாகவே போராடிவரு கின்றன. கடந்த 2021-ல் தி.மு.க.வின் தேர்தல் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகனே தற்போதும் நியமிக்கப்பட்டிருப்பதுதான் காங்கிரஸ் நிர்வாகி களின் பயமே. ஜெகத்ரட்சகனுக்கு விழுப்புரம் -புதுச்சேரி எல்லைக்கு அருகிலுள்ள கலிங்க மலைதான் சொந்த ஊர். அதோடு புதுவையில் சில தொழில்கள் அவருக்கு உள்ளன. இம்மாநிலத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாகவுள்ளனர். அதேபோல், ஜெகத்ரட்சகனுக்கு புதுவை முதல்வர் பதவி மீது ஒரு கண் உண்டு.
புதுவையை பொறுத்தவரை, தனிமனித செல்வாக்கு மிகமுக்கியம். அதனால்தான் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களாக பலர் இங்கு வெற்றிபெறுகிறார் கள். தி.மு.க. 10 இடங்களில் வெற்றி பெற்றால் சுயேட்சைகளை வைத்து ஆட்சியைப் பிடித்துவிடு வார்கள் என்ற கால்குலேசன்தான் காங்கிரஸின் பயத்துக்கு காரணம். அதனால்தான் தொகுதிகளை குறைத்துக் கொடுக்கும்படி கட்சித் தலைமையை புதுவை காங்கிரஸார் வேண்டுகிறார்கள்'' என்கிறார்கள்.
"புதுவையிலுள்ள காங்கிரஸ் -தி.மு.க.வினர் மோதிக்கொண்டாலும்... டெல்லியிலிருந்தும், அறிவா லயத்திலிருந்தும் உத்தரவுகள் பறந்தால் போதும், இருதரப்பும் இணக்கமாக அடங்கிப் போவார்கள்' என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/pondy2box-2025-12-18-17-34-05.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/18/pondy-2025-12-18-17-33-20.jpg)